Advertisement

தைவானை சுற்றி வளைத்து ராணுவ பயிற்சி தொடங்கிய சீனா

By: Nagaraj Mon, 10 Apr 2023 10:53:31 AM

தைவானை சுற்றி வளைத்து ராணுவ பயிற்சி தொடங்கிய சீனா

தைபே: சீனா, தைவானை சுற்றி வளைத்து ராணுவ பயிற்சியை தொடங்கியது. தைவானைச் சுற்றியுள்ள வான் மற்றும் நீரில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிபர் சாய் இங்-வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில், அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார்.

இந்த பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதும், அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சந்திப்பு நடக்கக்கூடாது என இரு தரப்பையும் கடுமையாக எச்சரித்தது.

71 chinese aircraft,71 சீன விமானங்கள்,9 ships, ,9 கப்பல்கள், combat, taiwan, training, தைவான், பயிற்சி, போர்

ஆனால், சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தைவான் அதிபர் சாய் இங்-வெனை சில நாட்களுக்கு முன் சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை சுற்றி வளைத்து ராணுவ பயிற்சியை தொடங்கியது. தைவானைச் சுற்றியுள்ள வான் மற்றும் நீரில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த போர் நடைமுறை நேற்றும் தொடர்கிறது.

இதன்படி காலை 6 மணியளவில் 71 சீன விமானங்களும், 9 கப்பல்களும் தைவானை சுற்றி வந்தன. இதனால் 2வது நாளாக இன்றும் தைவானை சுற்றி சீனா தனது போர் ஒத்திகையை தொடர்ந்துள்ளது தெளிவாகியுள்ளது. இதில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் J-11, J-10, J-16, Y-8 ASW, Y-20, KJ-500 ஆகியவை அடங்கும்.

அவர்கள் தைவான் ஜலசந்தியின் மத்திய பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் நுழைந்ததாக தைவான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :