Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவை, சீனா மிரட்டுகிறது; அமைச்சர் மைக் போம்பியோ குற்றச்சாட்டு

இந்தியாவை, சீனா மிரட்டுகிறது; அமைச்சர் மைக் போம்பியோ குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 02 June 2020 4:09:13 PM

இந்தியாவை, சீனா மிரட்டுகிறது; அமைச்சர் மைக் போம்பியோ குற்றச்சாட்டு

இந்தியாவை, சீனா மிரட்டுகிறது... 'எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி, இந்தியாவை, சீனா மிரட்டுகிறது,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது: இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், இந்திய - சீன எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழலை, தங்களுக்கு சாதகமாக, தந்திரமாக பயன்படுத்தி, இந்தியாவை, சீனா மிரட்டுகிறது.ஒரு சில நடவடிக்கைகள் மூலம், சீன அதிபர் ஜின்பிங், தன் ராணுவத்தின் திறமையை காட்ட நினைக்கிறார்.


south china sea,china,usa,conflict,athu violation ,தென் சீன கடல், சீனா, அமெரிக்கா, மோதல், அத்து மீறல்

சீனாவின் அச்சுறுத்தல் குறித்து, நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளோம். அதிபர் டிரம்ப் மீதும், எங்கள் ராணுவத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அமெரிக்க மக்களின் நலனையும், நாட்டையும் பாதுகாக்க, அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளுடனான நட்பை, மேலும் பலப்படுத்தி உள்ளோம்.

சீனாவுக்கு எதிராக, அமெரிக்க பார்லிமென்டில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அமெரிக்காவை நெருக்கடி நிலையில் தள்ளுவதற்கான முயற்சிகளில், சீனா இறங்கியுள்ளது.

south china sea,china,usa,conflict,athu violation ,தென் சீன கடல், சீனா, அமெரிக்கா, மோதல், அத்து மீறல்

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருடுவது, அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை சீர்குலைப்பது, தென் சீன கடல் பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுவது என, சீனாவின் நடவடிக்கைகளுக்கு, பல உதாரணங்களை கூறலாம்.

முதலில் கொரோனா வைரசை அமெரிக்காவுக்குள் புகுத்திய சீனா, இப்போது அரசியல் வைரசை புகுத்த முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளை, அமெரிக்க ராணுவம் முறியடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம், தென் சீன கடல் பகுதியில் அத்து மீறல் ஆகிய பிரச்னைகளில், சீனா - அமெரிக்கா இடையே, சமீபகாலமாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|