Advertisement

சீனாவில் இன்று 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 22 June 2020 5:16:16 PM

சீனாவில் இன்று 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் சுமார் 83,396 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 4,634 பேர் பலியாகியுள்ளனர். 78,413பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் வந்ததையடுத்து தற்போது அங்கு 2-வது அலை தொடங்கியுள்ளது.

சீனாவில் இன்று 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள். மேலும் இதில் 7 பேருக்கு கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெய்ஜிங்கில் 2-வது அலை தொடங்கி உள்ளதால் நகரில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

china,corona virus,beijing,vegetable market ,சீனா,கொரோனா வைரஸ்,பெய்ஜிங்,உகான்,காய்கறிச் சந்தை

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.

மேலும், தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் சூழ்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, போக்குவரத்துச் சேவை முடக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

Tags :
|