Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையை கைப்பற்ற முயற்சி செய்யும் சீனா: அமைச்சர் மைக் பாம்பியோ கடும் கண்டனம்

எல்லையை கைப்பற்ற முயற்சி செய்யும் சீனா: அமைச்சர் மைக் பாம்பியோ கடும் கண்டனம்

By: Nagaraj Sat, 20 June 2020 5:32:09 PM

எல்லையை கைப்பற்ற முயற்சி செய்யும் சீனா: அமைச்சர் மைக் பாம்பியோ கடும் கண்டனம்

சீனாவுக்கு கண்டனம்... பக்கத்து நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை சீன ராணுவம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய எல்லையில் சீனா உரிமை கோருவது நியாயமற்றது என்றும் பாம்பியோ சாடியுள்ளார். இதனால் கூடுதலான இடத்தை ஆக்ரமித்து கடல் எல்லையை அதிகப்படுத்த சீனா முயற்சித்து வருவதாக பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

extra space,occupation,china,condemnation,pompeii ,கூடுதல் இடம், ஆக்கிரமிப்பு, சீனா, கண்டனம், பாம்பியோ

கடந்த 15 ம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியதரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு முன்பே பாம்பியோ இரங்கல் தெரிவித்து இருந்தார்.
டென்மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இணையம் வாயிலாக வாஷிங்டனிலிருந்து பேசிய மைக் பாம்பியோ, தென் சீனக் கடல் பகுதியிலும் சீனாவின் கடற்படையினர் ஆக்ரமிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags :
|