Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு சீனா உட்படுத்தும்

கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு சீனா உட்படுத்தும்

By: Karunakaran Mon, 08 June 2020 2:15:07 PM

கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு சீனா உட்படுத்தும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. உலக நாடுகள் பல கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. இந்நிலையில், பீஜிங்கில் நேற்று சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர், வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

vaccination,coronavirus virus,china,beijing ,தடுப்பூசி,கொரோனா வைரஸ்,சீனா,பீஜிங்க்

இந்நிலையில், பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் பேட்டி அளித்தபோது, தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் அவர், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|