Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் எல்லையில் ராணுவத்தை வாபஸ் வாங்கும் சீனா; பின்னணி இதுதானா!

லடாக் எல்லையில் ராணுவத்தை வாபஸ் வாங்கும் சீனா; பின்னணி இதுதானா!

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:58:21 PM

லடாக் எல்லையில் ராணுவத்தை வாபஸ் வாங்கும் சீனா; பின்னணி இதுதானா!

அமெரிக்காவின் புதிய அதிபரை கண்டு சீனா அடங்கி சென்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள பாரியளவிலான படைகளை மீள அழைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த மே மாதம் முதல் நடந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், தொடர் ஆலோசனைகள் நடைபெற்றும் சீனா படைகளை மட்டும் மீள அழைக்க மறுத்தது. இதற்கான ஒப்பந்தங்கள் எதையும் சீனா மதிக்கவில்லை.

இந்நிலையில்தான் எல்லையில் படைகளை மீள அழைக்க சீனா ஒப்புக்கொண்டு உள்ளது. அதோடு பீரங்கிகள், ஆயுதங்களை எல்லையில் இருந்து எடுத்து செல்லவும் சீனா ஒப்புக்கொண்டு உள்ளது.

ladakh border,new president,india,china,forces ,லடாக் எல்லை, புதி அதிபர், இந்தியா, சீனா, படைகள்

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சீனா இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. 8வது கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் சீனா சம்மதம் தெரிவித்து உள்ளது. முதல்முறையாக சீனா இப்படி அடக்கமாக செல்ல முடிவு செய்துள்ளது. இதன் பின்னணிக்கு காரணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்று இருப்பதுதான்.

“அமெரிக்கா இஸ் பேக்” என்று வலுவான செய்திளை அவர் அளித்துள்ளார். பிற நாட்டு பிரச்சனையில் பைடன் மிகவும் கண்டிப்பாக நடப்பவர். இந்நிலையில்தான் எல்லையில் சீனா அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|
|