Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று - டிரம்ப்

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று - டிரம்ப்

By: Karunakaran Fri, 07 Aug 2020 09:37:39 AM

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று - டிரம்ப்

கடந்த ஆண்டு தொடக்கம் முதல் இருந்தே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகபோர் நடந்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரித்தொகையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்கு உயர்த்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை பல மடங்கு உயர்த்தியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

china,world trade organization,worst deal,trump ,சீனா, உலக வர்த்தக அமைப்பு, மோசமான ஒப்பந்தம், டிரம்ப்

இதனால் சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். தற்போது இதன் ஒரு பகுதியாக சீனா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிக்கும் சீனா அதன் விதிகளை மீறிவிட்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் இன்று அளித்த பேட்டியில், உலக சுகாதார அமைப்புக்குள் சீனா நுழைந்தது தான் இதுவரையிலான ஒப்பந்தங்களிலேயே மிகவும் மோசமான ஒன்று. உங்களுக்கு உண்மை தெரியவேண்டுமென்றால்... அந்த அமைப்பில் இதுவரை எந்த நாடுகளும் மீறாத விதிமுறைகளை சீனா மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :
|