Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான அமெரிக்காவின் செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான அமெரிக்காவின் செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

By: Karunakaran Tue, 30 June 2020 12:24:46 PM

சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான அமெரிக்காவின் செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்க ராணுவ துறை கடந்த வாரம் அமெரிக்காவில் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 20 சீன நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. தொழில்நுட்ப மற்றும் மொபைல் நிறுவனங்களான இவற்றின் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்கனவே அமெரிக்கா சீனா மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடைவிதிக்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

market economy,china,america,opposition ,சந்தை பொருளாதாரம், சீனா, அமெரிக்கா, எதிர்ப்பு

இந்நிலையில் இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அர்த்தமற்ற நிர்பந்தத்தை செலுத்தி வருகிறது. தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், அமெரிக்கா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.


Tags :
|