Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டது

ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டது

By: Karunakaran Wed, 08 July 2020 10:00:41 AM

ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டது

ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் பல் மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. மேலும் அங்கு நீண்ட காலமாக ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவை சீனா நிறைவேற்றியது. இதற்கு உலகம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரவுள்ளது.

hong kong,china,national security office,protest ,ஹாங்காங், சீனா, தேசிய பாதுகாப்பு அலுவலகம், எதிர்ப்பு

இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக பல ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த சட்டம் மூலம் ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். இதற்காக சிறப்பு அதிகாரிகளை ஹாங்காங்கில் சீனா நியமித்துள்ளது.

தற்போது சீன தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை ஹாங்காங்கில் அதன் நிர்வாகம் இன்று திறந்து வைத்துள்ளது.இந்த அலுவலக திறப்பு விழாவில் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
|