Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கில் அமலுக்கு வந்தது

சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கில் அமலுக்கு வந்தது

By: Nagaraj Wed, 08 July 2020 5:32:26 PM

சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கில் அமலுக்கு வந்தது

ஹாங்காங்கில் சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. இதுபோன்ற ஈடுபட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீனாவின் புதிய சட்டப்படி சேகரிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கை தனது ஆளுமைக்கு உட்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அங்கு அமல்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

hong kong,turmoil,dna samples,court,china ,ஹாங்காங், கொந்தளிப்பு, டிஎன்ஏ மாதிரிகள், நீதிமன்றம், சீனா

இந்தச் சட்டத்தின்படி, போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளில் முன் அனுமதியின்றி சோதனை செய்யவும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், தொலைத் தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து கேட்கவும் முடியும். ஆனால் சீனாவின் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|