Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்ச்சையை கிளப்பிய சீனாவின் உளவுக்கப்பல் வெளியேறியது

சர்ச்சையை கிளப்பிய சீனாவின் உளவுக்கப்பல் வெளியேறியது

By: Nagaraj Wed, 14 Dec 2022 11:05:48 AM

சர்ச்சையை கிளப்பிய சீனாவின் உளவுக்கப்பல் வெளியேறியது

புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவுக் கப்பல் வெளியேறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கப்பல் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sri lanka,china,ambantota,indian ocean,spy ship ,இலங்கை, சீனா, அம்பாந்தோட்டை, இந்திய பெருங்கடல், உளவுக்கப்பல்

சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும் நீண்ட தூர ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் யாங் வாங்-5 கப்பலை, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா நிறுத்தியிருந்தது.

Tags :
|