Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் வெளியேறுகின்றன

சீனாவின் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் வெளியேறுகின்றன

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:48:25 AM

சீனாவின் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் வெளியேறுகின்றன

நியூயார்க்: வெளியேறுகின்றன... சீன நாட்டின் மிக பெரும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், 'நியூயார்க் பங்குச் சந்தை'யை விட்டு வெளியேறுகின்றன.

அமெரிக்க பங்குச் சந்தையில் பல சீன நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பட்டியலிட்டுள்ளன. இந்த நிலையில், சீன நிறுவனங்களுடைய தணிக்கையாளர்களின் பதிவுகளை, அமெரிக்க அதிகாரிகள் பார்வையிடுவது குறித்து, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சீன அரசுக்கு சொந்தமான மூன்று பெரு நிறுவனங்கள், நியூயார்க் பங்குச் சந்தையில் இருந்து விலகுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.


'பெட்ரோசீனா, சீனா லைப் இன்சூரன்ஸ், சீனா பெட்ரோலியம் அண்டு கெமிக்கல்' ஆகிய மூன்று நிறுவனங்களும், நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து விலக முடிவு செய்துள்ளன. எனினும், ஹாங்காங் சந்தையில் வர்த்தகம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

market,exit,new york,call taxi,service,china ,சந்தை, வெளியேறுகின்றன, நியூயார்க், கால் டாக்சி, சேவை, சீனா

பிற நாட்டு முதலீட்டாளர்கள் இந்த சந்தை வாயிலாக சீன நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன.

இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்களும் சந்தையை விட்டு வெளியேறுவதற்கு, இந்த கருத்து வேறுபாடுகள் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சீனாவைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனமான 'அலிபாபா'வுக்கும் இத்தகைய சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சீனாவின் மிகப் பெரிய 'கால் டாக்சி' சேவை நிறுவனமான 'டிடி சூசிங்' கடந்த ஜூன் 10ம் தேதியன்று, நியூயார்க் சந்தையை விட்டு வெளியேறி, ஹாங்காங் சந்தையில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|