Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாள பிரதமர் சர்மா ஒலிக்காக சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சீன தூதர்

நேபாள பிரதமர் சர்மா ஒலிக்காக சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சீன தூதர்

By: Nagaraj Wed, 08 July 2020 5:49:43 PM

நேபாள பிரதமர் சர்மா ஒலிக்காக சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சீன தூதர்

நேபாளத்தில் பிரதமர் கேபி.சர்மா ஒலியை பதவி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் அவரது கட்சி முக்கிய தலைவர்களிடம் சீன தூதர் ஹோ யாங்கி சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜாலா நாத் கனால், மாதவ் குமார் நேப்பாள் உள்ளிட்டோரை சீன தூதர் சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டு பேச்சுவார்த்தையும் நடத்தியதாக கூறப்படுகிறது.

நேபாள குடியரசு தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் சர்மா ஒலி-க்கு ஆதரவாக அவர் பேசியதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

controversy,chinese ambassador,compromise talk,prime minister sharma sound ,சர்ச்சை, சீன தூதர், சமரச பேச்சு வார்த்தை, பிரதமர் சர்மா ஒலி

அதே சமயம் சர்மா ஒலியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் முன்னாள் பிரதமர் பிரசண்டா, சீன தூதரை சந்திக்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வரைபடம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் பிரதமர் சர்மா ஒலியை காப்பாற்ற, நேபாளத்தின் உள் விவகாரங்களில் சீன தூதர் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சர்மா ஒலி சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையாகி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சர்மா ஒலி-க்கான எதிர்ப்புகள் வலுவடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags :