Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது

50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது

By: Karunakaran Fri, 14 Aug 2020 11:53:00 AM

50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் முடங்கின. இதனால் சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்படைந்தது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து விட்டது. இதனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தற்போது தொடங்கி நடந்து வருகிறது. சீனாவில் இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது.

chinese civil aviation,august,50 countries,regions ,சீன சிவில் விமான போக்குவரத்து, ஆகஸ்ட், 50 நாடுகள், பிராந்தியங்கள்

சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி இதுகுறித்து கூறுகையில், ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன என்று கூறியுள்ளார்.

தற்ப்போது உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியை போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், மற்ற நாடுகளில் அதன் தாக்கம் பலமடங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|