Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியா சென்றுள்ள ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை

ரஷியா சென்றுள்ள ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை

By: Karunakaran Fri, 04 Sept 2020 1:49:04 PM

ரஷியா சென்றுள்ள ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ரஷ்யா சென்றுள்ளார். பின்னர் ராஜ்நாத்சிங், நேற்று ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்தார்.

பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்திய சீன மோதல் விவகாரம், எல்லை பிரச்சனை என பாதுகாப்புத்துறை மந்திரிகள் ஆலோசித்தனர். இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி விய் ஃபென்ஹி கோரிக்கை விடுத்துள்ளார்.

chinese defense minister,meet,rajnath singh,russia ,சீன பாதுகாப்பு அமைச்சர், சந்திப்பு,ராஜ்நாத் சிங், ரஷ்யா

இந்தியாவிடம் சீனா விடுத்துள்ள இந்த கோரிக்கையில் இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரு நாட்டு பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பு தொடர்பாக சீனா விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக இந்தியா தற்போதுவரை பதிலும் அளிக்கவில்லை.

லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க சீன பாதுகாப்புத்துறை மந்திரி அனுமதிகோரியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


Tags :
|