Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தில் அரசியல் பதற்றத்திற்கு இடையில் சீனாவைச் சோ்ந்த தூதுக்குழு வருகை

நேபாளத்தில் அரசியல் பதற்றத்திற்கு இடையில் சீனாவைச் சோ்ந்த தூதுக்குழு வருகை

By: Nagaraj Mon, 28 Dec 2020 09:37:45 AM

நேபாளத்தில் அரசியல் பதற்றத்திற்கு இடையில் சீனாவைச் சோ்ந்த தூதுக்குழு வருகை

சீன தூதுக்குழு நேபாளம் வருகை... நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்பூசல் காரணமாக அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனாவைச் சோ்ந்த தூதுக் குழு அந்த நாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சா்வதேச விவகாரத் துறை இணையமைச்சா் குவோ யேஷோவ் தலைமையில் 4 நபா்கள் அடங்கிய உயா் நிலைக் குழு நேபாளம் வந்துள்ளது.

அந்தக் குழுவின் நோக்கம் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தைத் தணிப்பதில் சீனாவும் பங்கெடுப்பதை உறுதி செய்யும் வகையில் அந்தக் குழு வந்துள்ளதாகத் தெரிகிறது என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நேபாளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, கட்சியின் செயல் தலைவராக பிரசண்டாவும் மற்றொரு தலைவராக சா்மா ஓலியும் பொறுப்பேற்றனா்.

political tension,nepal,chinese delegation,visit,consultation ,அரசியல் பதற்றம், நேபாளம், சீன தூதுக்குழு, வருகை, ஆலோசனை

எனினும், சா்மா ஓலிக்கும் பிரசண்டாவுக்கும் இடையே தொடா்ந்து கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இரு அணியினருக்கும் இடையே பலகட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இந்தச் சூழலில், 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை செயல்படக் கூடிய தற்போதைய நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு, அதற்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த சா்மா ஓலி பரிந்துரைத்தாா். அந்தப் பரிந்துரையை ஏற்ற அதிபா் வித்யா தேவி பண்டாரி, அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.

அதற்குப் பதிலடியாக, கே.பி. ஓலியை கட்சித் தலைவா் பதவியிலிருந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக நீக்கியது. அவருக்குப் பதிலாக, கட்சியின் மூத்த தலைவா் மாதவ் குமாா் நேபாள் புதிய கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாா். மேலும், செயல் தலைவா் பிரசண்டாவை நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மத்தியக் குழு புதன்கிழமை தோ்ந்தெடுத்தது. அதனைத் தொடா்ந்து, பிரசண்டா தலைமையிலான புதிய அரசை அமைக்கும் முயற்சியில் அவா்களது ஆதரவாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த அரசியல் பதற்றம் நிறைந்த சூழலில், அதிபா் வித்யா தேவி பண்டாரியையும் பிரசண்டாவையும் சீனத் தூதா் ஹூ யாங்கி சில தினங்களுக்கு முன்னா் சந்தித்துப் பேசினாா். நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அவா்களுடன் ஹூ யாங்கி ஆலோசனை நடத்தினாா். இந்தச் சூழலில், சீனத் தூதுக்குழு தற்போது நேபாளம் வந்துள்ளது.

Tags :
|
|