Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல்

By: Karunakaran Thu, 25 June 2020 7:50:04 PM

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல்

கடந்த 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவமும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகின.

இந்த மோதல் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது. பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். சீனாவின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க பல்வேறு அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

ladakh,calvan valley,chinese armies,chinese military ,லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு, சீன படைகள்,சீன ராணுவம்

தற்போது கல்வான் பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 22-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வான் பகுதியில் இருந்து தங்கள் வீரர்கள் பின்வாங்கி செல்வார்கள் என சீன ராணுவம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் படி, சில வீரர்கள் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன ராணுவத்தினரின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும்,சீன பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கவும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|