Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் மாயமானதாக தகவல்

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் மாயமானதாக தகவல்

By: Nagaraj Wed, 26 July 2023 11:48:40 PM

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் மாயமானதாக தகவல்

பெய்ஜிங்: மாயமான சீன வெளியுறவுத்துறை அமைச்சர்... சீன வெளியுறவு அமைச்சராக, 2022ல் இருந்து, குயின் கேங் செயல்பட்டு வருகிறார்.

57 வயதான இவர், ரஷ்யா, வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை, கடந்த மாதம், ஜூன், 25ல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து சீன செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்திப்புக்குப் பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பொது வெளியில் வரவில்லை. அதைத் தொடர்ந்து ஜூலை 4 அன்று வெளியுறவு அமைச்சருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பை சீனா ரத்து செய்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவரும், அமெரிக்க காலநிலை மாற்ற செயலாளருமான ஜான் கெர்ரி, சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

china,foreign affairs,mayam,minister, ,அமைச்சர், சீனா, மாயம், வெளியுறவுத்துறை

ஆனால், இந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. இதேபோல், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பங்கேற்கவில்லை. உடல்நலம் தொடர்பான காரணங்களால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

எனினும், சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் ஒரு மாதமாக பொது வெளியில் காணப்படவில்லை, இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து குயின் கேங்கை சீனா நீக்கியது.

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யூ பதவியேற்பார் என்றும் சீனா அறிவித்துள்ளது. இதேவேளை, அமைச்சர் பதவியில் இருந்து குயின் கேங் நீக்கப்பட்டதற்கான காரணத்தை சீன அரசாங்கம் வெளியிடவில்லை.

Tags :
|
|