Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செல்போனை தொலைத்த சீன சிறுமி: கண்டுபிடித்து தந்த விளையாட்டு மைதான ஊழியர்கள்

செல்போனை தொலைத்த சீன சிறுமி: கண்டுபிடித்து தந்த விளையாட்டு மைதான ஊழியர்கள்

By: Nagaraj Wed, 27 Sept 2023 5:02:00 PM

செல்போனை தொலைத்த சீன சிறுமி: கண்டுபிடித்து தந்த விளையாட்டு மைதான ஊழியர்கள்

ஹாங்ஸூ: தேடி பிடித்து ஒப்படைத்தனர்... சீனாவில் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஹாங்காங்கைச் சேர்ந்த 12 வயது சிறுமி லியு டியான் யி வந்திருந்தார்.

அரங்கில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த அவர், திடீரென தனது செல்போனை தொலைத்துவிட்டார். மேலும் அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சீன ஊழியர்கள், கொஞ்சம்கூட மனம் தளராமல் இது ஒன்றும் முடியாத காரியமல்ல என்று கூறி காணாமல் போன செல்போனை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.

girl,lost,cell phone,swits app,found ,
சிறுமி, தொலைத்து விட்டார், செல்போன், சுவிட்ஸ் ஆப், கண்டுபிடித்தனர்

10ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் 5,23,000 சதர மீட்டர் பரப்பளவுள்ள விளையாட்டு அரங்கத்தை சல்லடை போட்டு சலித்து தேடி கண்டுபிடித்தனர்.

லியு டியான் யி என்ற அந்த 12 வயது சிறுமி தொலைத்துவிட்ட செல்போன தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேல் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சல்லடை போட்டு தேடிய நேரத்தில் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து சிறுமி தவறவிட்ட செல்போன் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் அந்த செல்போனை அச்சிறுமியிடம் ஒப்படைத்தனர். அப்போதுதான் அச்சிறுமி நிம்மதி அடைந்தார். அவரது செல்போன் 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags :
|
|