Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் பகுதியில் மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்- இன்று கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை

லடாக் பகுதியில் மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்- இன்று கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை

By: Karunakaran Tue, 01 Sept 2020 5:47:48 PM

லடாக் பகுதியில் மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்- இன்று கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய- சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது.

இருதரப்பும் படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. போர் மூளும் சூழல் நிலவி வந்தது. அதன்பின் இருதரப்பு இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chinese military,ladakh,commander,india ,சீன இராணுவம், லடாக், தளபதி, இந்தியா

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் கூறுகையில், 9-ம்தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும், இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்றதாக இந்திய தரப்பில் கூறப்பட்டவுடன் ராணுவத் தளபதி அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று காலை சுஷுல்/மோல்டோ என்ற இடத்தில் இதுகுறித்து கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இந்திய ராணுவ தெரிவித்துள்ளது.

Tags :
|