Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன காவல்படை கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு

சீன காவல்படை கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 08 July 2020 5:19:57 PM

சீன காவல்படை கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு

ஜப்பான் எல்லைக்குட்பட்ட கடல்பரப்பில் சீன கடலோர காவல்படை கப்பல்கள் கடந்த நான்கு நாட்களில் இரண்டு முறை அத்துமீறி ஊருடுவியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவுகளிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சீன கப்பல்கள் ரோந்து சென்றதாக ஜப்பானிய கடற்கரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

japan,china,infringement,claim,authorities ,ஜப்பான், சீனா, அத்துமீறி, உரிமை கோரும், அதிகாரிகள்

டோக்கியோவிலிருந்து தென்மேற்கே ஆயிரத்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியேற்றப்படாத செங்காகு தீவுகள், தங்கள் சொந்தமானது என்று சீனாவும் ஜப்பானும் கூறி வரும் நிலையில், 1972 ஆம் ஆண்டு முதல் இந்த தீவுகளை ஜப்பான் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவை ஜப்பானின் ஒரு பகுதி என்று உரிமை கோரும் மசோதாவுக்கு கடந்த மாதம் அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ரோந்து செல்வது தங்கள் நாட்டின் உரிமை என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் இருநாட்டுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 4 நாட்களில் சீன கடலோர காவல்படை கப்பல்கள் இரண்டு முறை அத்துமீறி ஊருடுவியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு நிலை உருவாகி உள்ளது.

Tags :
|
|
|