Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திடீரென வித்தியாசமான முகமூடிகளை அணியும் சீன மக்கள்: என்ன காரணம்

திடீரென வித்தியாசமான முகமூடிகளை அணியும் சீன மக்கள்: என்ன காரணம்

By: Nagaraj Wed, 26 July 2023 7:01:47 PM

திடீரென வித்தியாசமான முகமூடிகளை அணியும் சீன மக்கள்: என்ன காரணம்

சீனா: சீனாவில் சமீப காலமாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் முகமூடிகளை அணிந்தபடி மக்கள் வெளியே செல்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கு உண்மையில் அச்சமாகவே இருக்கிறது.

கடந்த சில காலமாகவே முகமே தெரியாத அளவுக்கு கலர் கலராக முகத்தை முழுமையாக மூடியபடி மக்கள் வெளியே வருகிறார்கள். இப்படி வித்தியாசமாக வெளியே வரும் போதெல்லாம் கலர் கலராக முகத்தை ஏன் மக்கள் மூடிக்கொள்கிறார்கள் தெரியுமா? வெய்யில்தான் அதற்கு முக்கியக் காரணம். அதிகமான வெய்யிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றவே இப்படி செய்கிறார்களாம்.

அங்கு கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், ஃபேஸ் மாஸ்க்குகளின் தேவை சீனாவில் அதிகரித்துள்ளது. சீனாவில் வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த ஃபேஸ் மாஸ்க்குகள்தான் மக்களை பாதுகாக்கிறதாம். இந்த முகமூடியில் கண்கள் மற்றும் மூக்கிற்கு மட்டுமே துளை இருக்கும். அதிகப்படியான வெப்பம், புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தோல் புற்றுநோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் இத்தகைய முகமூடிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் சீனா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்கள், தங்களின் தோல் வெள்ளையாக இருப்பதையே விரும்புகிறார்கள். இந்திய பெண்களிடமும் இத்தகைய ஆசை இருப்பதை நாம் பார்க்கலாம்.

experts,warn,major cities,climate,change ,வல்லுனர்கள், எச்சரிக்கின்றனர், முக்கிய நகரங்கள், பருவநிலை, மாற்றம்

பெண்கள் என்றால் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற தொடர் விளம்பரங்கள் இங்கு உள்ள பெண்களை குறி வைத்து வருவதும் இதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீனாவில் அழகு சாதனப் பொருட்கள் இங்கே அதிகம் விற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்பம் அதிகரிப்பதற்கும் சர்வதேசத்திற்கும் என்ன கனெக்ஷன் என்று நீங்கள் கேட்டால், உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருவதுதான் கனெக்சன்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகப்படியான வெப்பம் இருப்பதற்கு இதுவே காரணம். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் உலகின் பல முக்கிய நகரங்கள் மூழ்கிவிடும் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவும் சீனாவும் இந்தப் பருவநிலை மாற்றம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், இதனால் ஏற்படும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
|