Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமூக இடைவெளியை பின்பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த சீன மக்கள்

சமூக இடைவெளியை பின்பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த சீன மக்கள்

By: Nagaraj Tue, 21 July 2020 3:46:42 PM

சமூக இடைவெளியை பின்பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த சீன மக்கள்

திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து சீனா மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி படம் பார்த்து மகிழ்சசி அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டதாகக் கூறி திரையரங்குகளைத் திறந்துவிடுள்ளது சீன அரசு. வூஹான் நகரத்தில்தான் உலகில் கொரோனா நோய்த்தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, சீனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

corona,theaters,people,social space,excitement ,கொரோனா, திரையரங்குகள், மக்கள், சமூக இடைவெளி, உற்சாகம்

பள்ளிக்கூடம், திரையரங்குகள், விற்பனை நிலையங்கள், சந்தை, மால்கள் என்று அனைத்தும் அடைக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். மற்ற நாடுகளை விடவும் சீனாவில் கொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. சீன அரசின் துரித நடவடிக்கையால் இதுவரை சுமார் 86,000 பேர் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,650 பேர் மட்டுமே.

கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரொனா வைரஸ் பரவலைப் பிப்ரவரி மாதத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தது சீனா. பிப்ரவரிக்குப் பிறகு தினமும் ஒற்றை இலக்கத்திலும் இரட்டை இலக்கத்திலும் மட்டுமே கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸை சீனா கட்டுக்குள் கொண்டுவந்த இதே காலகட்டத்தில் தான் உலகில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவத் தொடங்கியது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகமாகி, உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போகிறது.

corona,theaters,people,social space,excitement ,கொரோனா, திரையரங்குகள், மக்கள், சமூக இடைவெளி, உற்சாகம்

இந்நிலையில், நோய்த் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது திரையரங்குகளைத் திறந்துவிட்டுள்ளது. நோய் தொற்று குறைவாகக் காணப்படும் ஷாங்காய், ஹங்சோயு, குய்லின் ஆகிய நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 14 நாள்கள் கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்படாத பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் கடைபிடிப்பவர்கள், மாஸ்க் அணிந்த ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்குக்கு வந்து, செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் படங்களைப் சமூக வலைத்தளங்களில் செல்ஃபிகளை பகிர்ந்து வருகிறார்கள். சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 1.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|