Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டு வர சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து

டிரம்ப் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டு வர சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து

By: Karunakaran Mon, 05 Oct 2020 09:23:20 AM

டிரம்ப் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டு வர சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. தற்போது ராணுவ மருத்துவமனையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் பல்வேறு நாட்டு தலைவர்கள் டிரம்ப் மற்றும் மெலனியா கொரோனாவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

chinese president,jinping,trump,corona virus ,சீன ஜனாதிபதி, ஜின்பிங், டிரம்ப், கொரோனா வைரஸ்

ஜின்பிங் குறிப்பிட்டதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பாதிப்புக்கு ஆளானதை அறிந்து நானும், எனது மனைவி பெங் லியுவானும் வருத்தம் அடைந்தோம். அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய எங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் என்று கூறினார்.

கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், நிலையில், அவர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து தான் நலமுடன் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags :
|