Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க சீன அதிபர் உத்தரவு

அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க சீன அதிபர் உத்தரவு

By: Karunakaran Mon, 09 Nov 2020 3:43:34 PM

அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க சீன அதிபர் உத்தரவு

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீற முயன்றதால் கடந்த மே மாதம் முதல் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களையும் எல்லையில் குவித்து வைத்துள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த மோதலை தடுத்து பதற்றத்தை தணிப்பதற்கு இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை விலக்குவது குறித்து உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிகிறது.

chinese president,new railway line,arunachal pradesh,tibet ,சீன ஜனாதிபதி, புதிய ரயில் பாதை, அருணாச்சல பிரதேசம், திபெத்

இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணத்தில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் லின்ஜி பகுதிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று துவக்கி வைத்தபோது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மிக விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சீனா - திபெத் இடையே கின்காய் - திபெத் ரெயில் பாதை திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது ரெயில் பாதை திட்டமாக சிசுவான் - திபெத் ரெயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ரெயில் பாதை அருணாச்சபிரதேச எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ரெயில் பாதையானது திபெத்தின் லின்சி பகுதியாக வழியாக அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :