Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியதற்கு சீன அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியதற்கு சீன அதிபர் ஜின்பிங் பாராட்டு

By: Karunakaran Fri, 18 Dec 2020 07:51:37 AM

சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியதற்கு சீன அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீனா கடந்த மாதம் 24-ந் தேதி சாங்கே-5 என்ற விண்கலத்தை வென்சாங் விண்வெளி தளத்தில் இருந்து நிலவுக்கு அனுப்பி வைத்தது. இந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி வெற்றிகரமாக நிலவை சென்று அடைந்தது. அந்த விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் இருந்து பாறைத்துகள், மண் போன்ற மாதிரிகளை சேகரித்தது. அதன்பின்னர் அந்த லேண்டர், விண்கலத்தின் ஆர்பிட்டருடன் சேர்ந்தது.

இந்த லேண்டர் சேகரித்த நிலவின் மேற்பரப்பின் பாறைத்துகள், மண் போன்ற மாதிரிகள் சுமார் 4 கிலோ வரையிலான எடையை கொண்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த மாதிரிகளை சுமந்து கொண்டு, சாங்கே-5 விண்கலம் நேற்று உள்ளூர்நேரப்படி அதிகாலை 1.59 மணிக்கு சீனாவின் இன்னர்மங்கோலியாவில் சிசிவாங் பேனரில் பூமியில் தரை இறங்கியதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் சி.என்.எஸ்.ஏ. தெரிவித்தது.

china,xi jinping,chinese spacecraft,moon ,சீனா, ஜி ஜின்பிங், சீன விண்கலம், சந்திரன்

இந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் பாராசூட் துணையுடன் தரை இறக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது முதல்முறையாக சீன விண்கலம் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிலவின் இந்த புதிய மாதிரிகள், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த சாங்கே-5 விண்கலத்தின் நிலவு பயணம் வெற்றி அடைந்திருப்பதற்கு சீன கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சீன அதிபர் ஜின்பிங், திட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் மிகவும் சிக்கலான விண்வெளி திட்டத்தின் சாங்கே-5 விண்கலம், வேற்றுகிரகத்தை அடைந்து, வெற்றிகரமாக திரும்பி உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் எப்போதும் நம் நாட்டினாலும், மக்களாலும் நினைவில் வைக்கப்படும் என்று கூறி உள்ளார்.

Tags :
|