Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சிக்குள்ளேயே சவால்கள் உருவாகியுள்ளதாக தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சிக்குள்ளேயே சவால்கள் உருவாகியுள்ளதாக தகவல்

By: Karunakaran Mon, 06 July 2020 2:50:26 PM

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சிக்குள்ளேயே சவால்கள் உருவாகியுள்ளதாக தகவல்

தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. இந்தியா உடன் லடாக் மோதல் போக்கு, கொரோனா விவகாரம், சரிந்து வரும் உள்நாட்டு பொருளாதாரம், உலக சுகாதார அமைப்பின் விசாரணை என பல்வேறு நெருக்கடிகள் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளன.

தற்போது பூடான் உடனும் தங்களுக்கு எல்லை பிரச்சினை உள்ளதாக முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக சீனா தெரிவித்துள்ளது. இது புதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பூடான் உடன் தங்களுக்கு நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை உள்ளதாகவும், இதில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

xi jinping,own party,chinese president,challenges ,ஜி ஜின்பிங், சொந்த கட்சி, சீன ஜனாதிபதி, சவால்

கொரோனா விவகாரத்தை எதிர்கொள்வதிலும், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளை கையாள்வதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடும் சவால்களை சந்தித்து வருகிறார். கொரோனாவுக்கு பிறகும் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதை காட்டவும், சர்வதேச அரங்கில் எழுந்துள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் இந்தியாவுடன் சீனா எல்லை பிரச்சனை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனால் தற்போது ஜி ஜின்பிங்கின் நடவடிக்கைகள் அவருக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே சவால்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :