Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதா ? -உண்மை பின்னணி என்ன ?

இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதா ? -உண்மை பின்னணி என்ன ?

By: Karunakaran Mon, 22 June 2020 1:47:53 PM

இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதா ? -உண்மை பின்னணி என்ன ?

இந்தியாவில் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக அந்த வைரல் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள சில சீன செயலிகளுக்கு தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய தகவல் ஆணையம் வெளியிட்டதாக அந்த வைரல் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 சீன செயலிகளில் பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்து மற்றும், இவை நாட்டின் பாதுகாப்புக்கு கலங்கம் ஏற்படுத்தலாம் போன்ற காரணங்களால் இவற்றை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

chinese processors,india,apple and google playstore , சீன செயலி,தடை,இந்தியா,ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்

இந்த வைரல் தகவலை ஆய்வு செய்தபோது, இந்த வைரலான சீன செயலிகள் பட்டியல் போலி என தெரியவந்துள்ளது. இதனை ஆய்வு செய்த பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அமைப்பு வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

வைரலான செயலிகள் பட்டியலில், லைவ்மி, பிகோ லைவ், விகோ வீடியோ, பியூட்டி பிளஸ், கேம்ஸ்கேனர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லெஜண்ட்ஸ், கிளப் ஃபேக்ட்ரி, ஷெயின், ரோம்வி, ஆப்லாக், விமேட் மற்றும் கேம் ஆஃப் சுல்தான் போன்றவை இடம்பெற்றிருந்தன. மேலும் இதனுடன் டிக்டாக் செயலியும் இணைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த ஆய்வில் இது போலி செய்தி என தெரிய வந்துள்ளது.

Tags :
|