Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்... தேர்தல் அலுவலர் தகவல்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்... தேர்தல் அலுவலர் தகவல்

By: Nagaraj Mon, 27 Feb 2023 09:55:51 AM

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்... தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மேனகா, தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

polling station,prohibition,voters,surveillance,awadi ,வாக்குச்சாவடி, தடை, வாக்காளர்கள், கண்காணிப்பு, அவதி

இதனிடையே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

இதனிடையே வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.

Tags :
|