Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் குடியுரிமை சட்டம் செயல்படுத்தப்படும்

கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் குடியுரிமை சட்டம் செயல்படுத்தப்படும்

By: Nagaraj Sat, 07 Nov 2020 7:16:14 PM

கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் குடியுரிமை சட்டம் செயல்படுத்தப்படும்

மத்திய அமைச்சர் தகவல்... கொரோனா வைரஸ் தொற்று உறுதியாக கட்டுப்பாட்டுக்குள் வந்து முடிவடைந்தவுடன் நாடு முழுவதும் குடியுரிமை (திருத்த) சட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று பாஜக கூறியுள்ளது. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது பாஜக.

சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். 2வது நாளான நேற்று கொல்கத்தாவில் உள்ள தக்ஷினேஷ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

opposition,violence,citizenship law,procedure,west bengal ,எதிர்ப்பு, வன்முறை, குடியுரிமை சட்டம், வழிவகை, மேற்கு வங்கம்

செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. நரேந்திர மோடியின் தலைமையில் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாக கட்டுப்பாட்டுக்குள் வந்து முடிவடைந்தவுடன் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும். இது கொரோனா வைரஸ் தொற்று நோய் முடிவுக்கு வந்த பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்துள்ள முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. மற்ற இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உட்பட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் நடைபெற்றன. என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :