Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்

By: Karunakaran Wed, 02 Sept 2020 11:44:36 AM

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்நாட்டின் பக்டியா மாகாணம் ஹர்டீஸ் பகுதியில் அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தின் நுழைவாயில் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்தது. பயங்கரவாதி ஒருவன் காரை வேகமாக இயக்கி ராணுவ தளத்தின் நுழைவாயிலில் மோதச்செய்து, வெடிகுண்டுகள் நிரப்பிய அந்த காரையும் வெடிக்கச்செய்தான்.

clashes,taliban terrorists,security forces,afghanistan ,மோதல், தலிபான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படைகள், ஆப்கானிஸ்தான்

தற்கொலைப்படை தாக்குதலில் காரில் இருந்த பயங்கரவாதி உடல் சிதறி உயிரிழந்தான். சில பாதுகாப்பு படையினரும் படுகாயமடைந்தனர். காரில் இருந்து குதித்த 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே சில நிமிடங்கள் நீடித்த சண்டையில், இறுதியாக 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், இந்த சண்டை மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். மேலும், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Tags :