Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் .. முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை

விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் .. முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை

By: vaithegi Fri, 26 Aug 2022 8:30:30 PM

விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள்  ..  முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை

திருப்பூர் : திருப்பூரில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த தொடர் வகுப்புகளால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்தடைந்துள்ளது.

holidays,private schools , தனியார் பள்ளிகள்,முதன்மை கல்வி அலுவலர்

எனவே அதனால் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் விடுமுறை தினங்களில் பள்ளிகள் நடத்தப்பட கூடாது என்பது பற்றி ஏற்கனவே பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தகவல்கள் குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :