Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 179 தொழில்முறை கல்லூரிகள் மூடல்; ஏஐசிடிஇ அறிக்கையில் தகவல்

179 தொழில்முறை கல்லூரிகள் மூடல்; ஏஐசிடிஇ அறிக்கையில் தகவல்

By: Nagaraj Wed, 29 July 2020 12:14:30 PM

179 தொழில்முறை கல்லூரிகள் மூடல்; ஏஐசிடிஇ அறிக்கையில் தகவல்

கொரோனா தாக்கம் காரணமாக 179 தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கடந்த 9 ஆண்டுகளில் மிக அதிகம் என்று தெரிவிக்கப்படடுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா தாக்கம் காரணமாக 2020 - 2021 நடப்பு கல்வி ஆண்டில், இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் வணிகப் பள்ளிகள் உட்பட 179 தொழில்முறை கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் இல்லாததாலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு 179 தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கடந்த 9 ஆண்டுகளில் மிக அதிகம்.

department of higher education,electronic administration,corona,impact ,உயர்கல்வித் துறை, மின்னணு நிர்வாகம், கொரோனா, தாக்கம்

நடப்பு ஆண்டில், மேலும் 134 நிறுவனங்கள் புதிய படிப்புகளுக்கு அரசிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை. தற்போதைய நிலையில், வருடாந்திர ஒப்புதல் செயல்பாட்டில் ஒரு நடைமுறை மாற்றம் அவசியமானது என்பதால் அது ஏஐசிடிஇ-யால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதே நேரம் புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் பெறாதது கொரோனா வைரஸ் தாக்கம் உயர்கல்வித் துறையை கடுமையாக பாதித்துள்ளது என்பதை காட்டுகிறது. ஊரடங்கு அனைத்து துறைகளுக்கும் கடும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சவாலை சந்தித்து மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னணு நிர்வாகத்தை ஏஐசிடிஇ மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பயணம் இல்லாமல் செலவுகள் குறைவதோடு, நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|