Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்று அதிகரித்தால் கையாளுவது எப்படி? மருத்துவ குழுவுடன் நாளை முதல்வர் ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்தால் கையாளுவது எப்படி? மருத்துவ குழுவுடன் நாளை முதல்வர் ஆலோசனை

By: Monisha Mon, 07 Sept 2020 2:15:26 PM

கொரோனா தொற்று அதிகரித்தால் கையாளுவது எப்படி? மருத்துவ குழுவுடன் நாளை முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. முக்கியமாக மாநிலத்திற்குள் பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற தளர்வினால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று கருதி, வழிகாட்டி விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவற்றை மீறுவதை குற்றம் என்று அறிவித்து அபராத தொகையையும் அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மருத்துவ குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடத்தப்படுகிறது.

corona virus,vulnerability,medical team,chief minister,consulting ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,மருத்துவ குழு,முதல்வர்,ஆலோசனை

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தற்போது பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தயார் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை உயர்த்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை மையங்களை தயார்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags :