Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

By: Monisha Fri, 21 Aug 2020 09:52:51 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுஇடங்களிலும், கோவில்களின் முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ganesha chaturthi,edappadi palanisamy,greetings,statue,procession ,விநாயகர் சதுர்த்தி,எடப்பாடி பழனிசாமி,வாழ்த்து,சிலை,ஊர்வலம்

இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
|