- வீடு›
- செய்திகள்›
- ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
By: Monisha Fri, 03 July 2020 5:26:40 PM
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தறபோது ஜூலை 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அசிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் வழகிய அசிரி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில், விலையின்றி வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகின்ற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். பொருட்கள் வழங்கப்படும் நாள், மற்றும் நேரம் குறிப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலைக்கடைகளுக்கு 10.07.2020 முதல் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.