Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்னணு வணிக நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு

மின்னணு வணிக நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு

By: Monisha Fri, 03 July 2020 10:17:09 AM

மின்னணு வணிக நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

electronic business firms,investment,letter,cm edappadi palanisamy,tamil nadu ,மின்னணு வணிக நிறுவனங்கள்,முதலீடு,கடிதம்,எடப்பாடி பழனிசாமி,தமிழ்நாடு

தற்போது 5 முன்னணி மின்னணு வணிக (இகாமர்ஸ்) நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

‘ரகூட்டன் கிரிம்ஸன் ஹவுஸ்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஹிரோஷி மிகிடனி, ‘பி2டபிள்யு’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், ‘சீ லிமிடெட்’ (ஷாப்பீ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழு முதன்மைச் செயல் அலுவலர் பாரஸ்ட் லீ, ‘க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ‘ஷாலண்டோ எஸ்இ ஹெட்குவாட்டர்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகியோரை நேரடியாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|