Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் முதற்கட்டமாக 200 மினி கிளினிக்... முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் முதற்கட்டமாக 200 மினி கிளினிக்... முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

By: Monisha Mon, 14 Dec 2020 08:24:54 AM

சென்னையில் முதற்கட்டமாக 200 மினி கிளினிக்... முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், இன்று காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்குகளை தொடங்கி வைக்கிறார். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது.

chennai,mini clinic,corona virus,edappadi palanisamy,treatment ,சென்னை,மினி கிளினிக்,கொரோனா வைரஸ்,எடப்பாடி பழனிசாமி,சிகிச்சை

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ.க்கு ஒரு ஆஸ்பத்திரி இருக்கும். இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, வரும் 16-ந்தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Tags :