Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது மின் இணைப்புக்கான கட்டண சலுகை ... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது மின் இணைப்புக்கான கட்டண சலுகை ... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By: vaithegi Wed, 18 Oct 2023 2:29:32 PM

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது மின் இணைப்புக்கான கட்டண சலுகை ...  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் பற்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்று கொண்டு வருகிறது. 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , "கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்; விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எவ்வித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும்;

chief minister stalin,public electricity connection,electricity tariff concession , முதல்வர் ஸ்டாலின் , பொது மின் இணைப்பு,மின் கட்டண சலுகை


இதனை அடுத்து நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது; 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்; சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8லிருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும்;இவ்வாறு பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்;

நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்; இதை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :