Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி உதவித்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

கல்வி உதவித்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

By: Nagaraj Thu, 08 Dec 2022 6:12:28 PM

கல்வி உதவித்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது.

correspondence,chief stalin,students,education,scholarships ,கடிதம், முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள், கல்வி, உதவித்தொகை

மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 1 -8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களுக்கு முன்னர் வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கவேண்டும்.

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்காமல் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் அளிப்பதுதான் சிறந்தது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :