Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம்

By: vaithegi Tue, 21 Feb 2023 6:28:31 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எனவே அதன்படி முதற்கட்டமாகசென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வந்தடைந்தார். திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வந்தடைந்தார். அவருக்கு தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

tour,chief ,சுற்றுப்பயணம்,முதல்வர்

இதனை தொடர்ந்து, நாளை காலை கார் மூலம் மன்னார்குடிக்குச் சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்க உள்ளார். அடுத்ததாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சிக்கு வந்தடைந்து அங்கியிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட இருக்கிறார்.இதையடுத்து முதல்வர் வருகையை முன்னிட்டு 2 மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|