Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

By: Nagaraj Sun, 28 June 2020 12:52:31 PM

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கா?... சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட பகுதிகளில் தமிழக அரசு கடந்த 19ம் தேதி முதல் அறிவித்த முழு ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.

புதன்கிழமையன்று முழு ஊரடங்கைத் தளர்த்துவதா மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

tomorrow,consultation,full curfew,extension,government of tamil nadu ,நாளை, ஆலோசனை, முழு ஊரடங்கு, நீட்டிப்பா, தமிழக அரசு

மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படியே தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக முடிவெடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கின் 5வது கட்ட நீட்சியும் செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.

ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து சூழ்நிலைக்கேற்ப மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களுடன் தமிழக அரசு நாளை இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :