Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளியில் காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா ,,, கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற செயலி

பள்ளியில் காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா ,,, கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற செயலி

By: vaithegi Mon, 19 Sept 2022 4:42:18 PM

பள்ளியில் காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா  ,,,  கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற செயலி

சென்னை: ’ முதல்வரின் காலை உணவு’ திட்டத்தை கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற செயலி ... செப்டம்பர் 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியல் இட்டு அறிவித்துள்ளது.

இதை அடுத்து இந்நிலையில், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியானது 6 சமையல் கூடங்களில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது. தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் உணவு சரியான நேரத்தில் தயாரிக்கப்பட்டு, முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் சி.எம்.13எப்.எஸ். என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

snack,cm13fs ,சிற்றுண்டி,சி.எம்.13எப்.எஸ்.

எனவே இதன் மூலம் சமையல் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் வினியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிக்க முடியும்.

மேலும், எங்கு தாமதம் ஏற்படுகிறது என்பதையும் அறிய முடியும். அதிலும் குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :
|