Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 07 Apr 2023 09:19:41 AM

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை... தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அவர், ஏற்கனவே 105 கிராமங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டு அந்த இடங்களில் இருந்து மக்கள் வெளியேறும் சூழல் நிலவுவதாக கூறினார்.

agriculture,defense,zonal,coal,industry. do not set ,வேளாண், பாதுகாப்பு, மண்டலம், நிலக்கரி, தொழிற்சாலை. அமைக்கக்கூடாது

தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இ.பி.எஸ். குறிப்பிட்டார்.

மேலும், வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஓர் தொழிற்சாலைகளும் அமைக்க கூடாது என்பது சட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags :
|
|