Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்படவுள்ளது

கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்படவுள்ளது

By: vaithegi Thu, 28 Sept 2023 10:36:55 AM

கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்படவுள்ளது


சென்னை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் விழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து அதன் விவரம்: சென்னை கடற்கரையிலிருந்து செப்.29-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்குஅடையும். பின் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

tiruvannamalai,pournami krivalam ,திருவண்ணாமலை ,பவுர்ணமி கிரிவலம்

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து செப்.30-ம் தேதி அதிகாலை 3.45மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்கு அடையும்.

அதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுசென்னை கடற்கரைக்கு காலை 9.05 மணிக்கு அடையும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags :