Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும்

சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும்

By: vaithegi Sun, 27 Nov 2022 9:44:00 PM

சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும்

சென்னை: டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும் .... வங்கக்கடலில் உள்ள காற்றின் சுழற்சி இன்னும் கலையாத நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு - மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு திசையில் இருந்து வரும் காற்றின் அலையின் காரணமாக சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும்.

rainy,chennai,nagai ,மழை ,சென்னை ,நாகை

இதனை அடுத்து மேற்கு தமிழகத்தின் கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அருகிலுள்ள கரூர் மாவட்டத்திலும் கூட மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது..

மேலும் தென் தமிழக மாவட்டங்களைப் பொறுத்த அளவில் நெல்லை, ராமந்தபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக இந்த மழை அடை மழை போலவோ, பரவலாகவோ இருக்காது. சில இடங்களில் அடித்து பெய்யும். சில இடங்களில் மழையின் வாசம் கூட இல்லாமல் போகலாம்.

Tags :
|