Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

By: vaithegi Mon, 13 Nov 2023 4:12:10 PM

கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்டு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் ஆகிய ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

orange alert,heavy rain,coastal districts,puducherry,karaikal ,ஆரஞ்சு எச்சரிக்கை ,கனமழை ,கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி ,காரைக்கால்


தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 17-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :