Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக கடலோர மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 03 Jan 2023 09:44:41 AM

தமிழக கடலோர மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வட கிழக்கு பருவ காற்று மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

எனினும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று இன்னும் 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

moderate rainfall,coastal districts ,மிதமான மழை,கடலோர மாவட்டங்கள்

இதனை அடுத்து இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :