Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை - பிஹார் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோவை - பிஹார் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Wed, 11 Oct 2023 1:56:22 PM

கோவை - பிஹார் வாராந்திர சிறப்பு ரயில் சேவை  வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோவை: வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு ... சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பிஹார் மாநிலம் பரௌனி - கோவை இடையே இயக்கப்பட்டு வரும்

வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03357), பரௌனியிலிருந்து சனிக் கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைகிறது.

weekly special train,coimbatore,biha , வாராந்திர சிறப்பு ரயில் ,கோவை ,பிஹா

இதனை அடுத்து இந்த ரயில் சேவை, வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.கோவை - பரௌனி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03358), புதன்கிழமைகளில் கோவையிலிருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு,

வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு பரௌனி சென்றடைகிறது. இந்த ரயில் சேவை அறுக்கிற டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :