Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 08 Sept 2023 11:14:26 AM

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், வரும் 10, 11-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,coimbatore,nilgiris ,கனமழை ,கோவை, நீலகிரி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :